அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளோயிட் பொலிஸாரால் கொல்லப்பட்டநிலையில் மற்றுமொரு சம்பவமாக 75 வயது முதியவரை தரையில் தள்ளி விட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரால் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளோயிட்டின் மரணத்தைக் கண்டித்து பஃபல்லோ நகரில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் முடிவில் பொதுமக்கள் கலைந்து சென்ற நிலையில் எதிரில் வந்த 75 வயது முதியவரை பொலிசார் இருவர் தள்ளி விட்டனர்.
எதிர்பாராத அந்த தாக்குதலால் நிலைகுலைந்து தரையில் விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்து காயமடைந்த முதியவரை கண்டுகொள்ளாமல் பொலிசார் அங்கிருந்து நகர்ந்தனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு பொலிசார் மீது நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.அந்த பொலிசார் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு பப்பலோ கலவர தடுப்பு பொலிசார் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் ஒருபகுதியாக பப்பலோ கலவர தடுப்பு பொலிசார் குழுவில் மொத்தமுள்ள 57 பேரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.
காயமடைந்த முதியவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.