சென்னையில் இளம் தாயொருவர் குழந்தை பிரசவித்து சில மணி நேரங்களில் இறந்துபோயுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரை சேர்ந்தவர் கணேசலிங்கம். இவர் தனியார் நிறுவனமொன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் பிரபா(24) என்னும் இளம்பெண்ணுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
திருமணமான 4 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரதட்சணை மற்றும் விவாகரத்து தொடர்பாகவும் வழக்கு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரபா கர்ப்பமாக இருந்த நிலையில் குழந்தை பிறந்தால் இருவரும் சமாதானமாகி விடுவார்கள் என உறவினர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிரவசத்திற்காக பிரபா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு குழந்தை இறந்து பிறந்தது.
அதை தொடர்ந்து பிரபாவின் நிலையும் மோசமானதால் அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பிரபா இறந்து போனார்.
மருத்துவர்கள் போதிய கவனம் செலுத்தாதே பிரபாவின் மரணத்துக்கு காரணம் என அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.
இதனையடுத்து ச்ம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பிரபாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததையடுத்து உறவினர்கள் பிரபாவின் உடலை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.