இந்தியாவில் பணப்பிரச்சனையில் மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் விஸ்ரம்பூர் கிராமத்தை சேர்ந்த ராமசேனி – குஷ்மா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் இரண்டாவது மகனின் மனைவி பெயர் காமினி.
ராமசேனி சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு சொந்தான நிலங்களை விற்பனை செய்த நிலையில் அவருக்கு அதன் மூலம் ரூ 25 லட்சம் பணம் கிடைத்தது.
அதிலிருந்து தனக்கு ரூ 10 லட்சத்தை கொடுக்க வேண்டும் என காமினி தனது மாமியார், மாமனாரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக காமினி தனது மாமியார் குஷ்மாவிடம் வாக்குவாதம் செய்த நிலையில், வயதானவர் என்றும் பாராமல் அவரை அடித்துள்ளார்.
குஷ்மாவின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த ராம்சேனி தனது மருமகளை தடுக்க முயன்ற போது ஆத்திரமடைந்த காமினி மாமனார் ராம்சேனியை கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து கத்தியபடி இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராம்சேனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் பயந்து போன காமினி வீட்டிலிருந்து ஓட முயன்ற போது அங்கிருந்த அவரின் உறவினர், கிராம மக்கள் உதவியுடன் காமினியை பிடித்தனர், ஆனாலும் காமினி அவர்களை கற்களால் அடித்தார்.
இதையடுத்து அனைவரும் சேர்ந்து காமினியை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதன் பிறகு சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ராம்சேனியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு, கைது செய்யப்பட்ட காமினியிடம் விசாரணை நடத்தினார்கள், அப்போது நடந்த அனைத்தையும் அவர் வாக்குமூலமாக அளித்தார்.
மேலும் அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.