பிரான்சில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் இதுவரை ஒரு லட்சத்து 53-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இநிலையில் கடந்த ஞாயிற்று கிழமை, (ஜுன் 7-ஆம் திகதி கடந்த 24 மணி நேரத்திற்குள்) கொரோனா வைரஸ் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், பல மருத்துவமனைகள் பலி எண்ணிக்கையை அறிவிப்பதில் சிரமப்படுவதால், எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் அதன் எண்ணிக்கை சரி செய்யப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் மட்டும் இதுவரை 18,805 பேர் உயிரிழந்துள்ளனர். முதியோர் இல்லங்களின் 10,350 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து 153,977 பேர் பிரான்சில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
70, 842 -க்கும் மேற்பட்ட நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.