லண்டனில் இருக்கும் பூங்காவில் இரண்டு பெண்கள் இறந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் வடமேற்கு பகுதியில் இருக்கும் Fryent Country பூங்காவில், இரண்டு பெண்கள் பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்த போது அவர்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளன.
இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், சரியாக உள்ளூர் நேரப்படி 1.08 மணிக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக அவசர சேவைகள் அனுப்பப்பட்டன. இருப்பினும் அவர் இறந்ததாக கூறப்பட்டதால், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முறையும் சரியான நேரத்தில் நடைபெறும் என்றும் குறித்த பூங்கா 1.30 மணிக்கு மூடப்பட்டுவிட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.
லண்டன் ஆம்புலன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மதியம் 1.25 மணியளவில் கிங்ஸ்பரி நகரில் உள்ள பிரையன்ட் கன்ட்ரி பூங்காவில் நடந்த ஒரு சம்பவம் குறித்து நாங்கள் அழைக்கப்பட்டோம்.
இதனால் நாங்கள் ஆம்புலன்ஸ் குழுவினரையும், ஒரு மேம்பட்ட துணை மருத்துவ பயிற்சியாளரையும், அதிகாரியையும் அனுப்பினோம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சம்பவ இடத்தில் இரண்டு பேர் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இறந்த பெண்கள் யார்? அவர்களின் வயது, விபரங்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பொலிசார் அறிவிக்கவில்லை.