திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியொருவரின் கையை பிடித்த இளைஞருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நபரை இம்மாதம் 12 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(8) உத்தரவிட்டார்.
புடவைக்கட்டு,குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞர் குச்சவெளி பகுதியிலுள்ள பதினாறு வயதுடைய சிறுமியை வீட்டில் யாரும் இல்லாதபோது கையைப் பிடித்துள்ளதாக சிறுமியின் பெற்றோர்களினால் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படடுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞரை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.