மட்டக்களப்பு ஏறாவூரில் தாய்பால் புரைக்கேறியதால் பிறந்து 33 நாட்களான சிசுவொன்று நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி தாமோதரம் வீதியைச் சேர்ந்த ரஜனிக்காந் சுஜித் என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த சிசு வாயின் மேல் உதட்டில் சிறிது காயத்துடன் பிறந்துள்ளது.
தாயார் அக்குழந்தைக்கு பால் அருந்தக்கொடுத்து விட்டு உறங்க வைத்துவிட்டு முதலாவது பிள்ளைக்கு இரவு உணவு கொடுத்து வந்து பார்க்கும் போது சிசு மூச்சு எடுக்க சிரமப்பட்டுள்ளது.
உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவந்த போது சிசு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தாய்ப்பால் புரைக்கேறியதில் ஏற்பட்ட மரணம் என அறிக்கை சமர்பித்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.