பிரித்தானியாவில் வணிக வளாகம் ஒன்றின் அருகே பட்டப்பகலில் திடீரென்று முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவம் லிங்கன்ஷயர் நகரில் நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற மருத்துவ ஊழியர்கள், முதற்கட்டமாக அந்த தெருவை முடக்கியதுடன்,
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உடையுடன் அந்த முதியவரை அணுகியுள்ளனர்.
அந்த முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றார்.
மேலும் கொரோனா பரவல் அச்சம் நீடிப்பதால் மருத்துவ ஊழியர்கள் அவரை மிகுந்த பாதுகாப்புடன் நெருங்கியுள்ளனர்.
மேலும், தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், ஃபைவ்வேஸ் ரவுண்டானாவில் உள்ள டர்பன் சாலையில் இருந்து ராபர்ட்ஸ் தெருவுக்கு செல்லும் போக்குவரத்தை முடக்கினர்.
பின்னர் பொலிஸ் பாதுகாப்புடன் அந்த முதியவர் டயானா, வேல்ஸ் இளவரசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மாலை 4 மணியளவில் டர்பன் சாலை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு பேருந்துகள் வெலிங்டன் தெருவில் திருப்பி விடப்பட்டன.
இதனிடையே, அந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பா என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.