இலங்கை சுற்றுலாத்துறை இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 250 மில்லியன் அமெரிக்க டொலரினை இலாபமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையான பத்து மாத காலத்திற்குள் இலங்கைக்கு 14.6 வீதமான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இதன் மூலம் 2.75 அமெரிக்க பில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலாச் சபை அறிவித்துள்ளது.அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் 607.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணியாளர்களால் பத்து மாதத்திற்குள் 5.99 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வருமானம் கடந்த வருடத்தை விட 3.5 வீத வளர்ச்சியைக் காட்டுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.