திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வடி சாராயம் விற்பனை செய்து வந்த நபரொருக்கு 1,25000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் ஏழு மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கிளிவெட்டி,பாரதிபுரம்,மூதூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கேஇவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கங்குவேலி,முதளைமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வடிசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நிலையிலே சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு பரல் வடிசாராயம்பரலும்,ஒரு பரல் கோடா பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.