Loading...
மலேசியாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை நாடு திரும்பினார்.
ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
மலேசியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, மலேசிய மன்னர் மற்றும் பிரதமரை சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையே 5 ஒப்பந்தங்கள்கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...