கடந்த 20 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் (Medical Centre) வைத்திய மையம் நடாத்தி, வைத்திய சேவை செய்து வரும் டாக்டர் சிதம்பரப்பிள்ளை தவசீலன் அவர்களுக்கு “Order of Australia” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது அவுஸ்திரேலியா ரீதியாக மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்டு மிகவும் தகுதி வாய்ந்தவர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் ஒரு விருதாகும்.
இந்த விருதை டாக்டர் சிதம்பரப்பிள்ளை தவசீலன் அவர்கள் பெற்றது தமிழர்களுக்கும் மற்றும் மருத்துவ சேவைக்கும் அளிக்கப்பட்ட ஒரு கௌரவமாக அமைகிறது.
இதில் அவருடைய சேவையும் தகைமையும் நிச்சயமாக ஆராயப்பட்டுத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் பல பொது ஸ்தாபனங்கள் மற்றும் தனிப்பட்ட தகுதிவாய்ந்தவர்களுடைய ஆலோசனைகள் பெறப்பட்டு தான் முடிவுகள் எடுக்கப்படும்.
இவர் தனது தலைமையில் 40க்கு மேற்பட்ட மருத்துவத்துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் இந்த மருத்துவ நிலையத்தை நடத்தி வருகின்றார்.
பலதரப்பட்ட மக்கள் இனம், மொழி வேறுபாடின்றி இவரிடம் வைத்திய சேவைக்காக வருகிறார்கள். இவர் நடத்தும் இந்த மருத்துவ நிலையம் மக்களுக்கு பெரிய சேவை செய்து உள்ளது என்பதை கண்டறிந்து தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இவரின் சேவையின் தரத்தை ஊகித்துக் கொள்ளலாம்.
இவர் தனது வைத்திய சேவை தவிர உள்ளூர் சுகாதார மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான செயல்பாடுகளிலும் ஆதரவும் ஈடுபாடும் உள்ளவர் என்பதும் கவனிக்கத்தக்கது.