மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் ஒருவரினால் நடத்தப்பட்ட இரகசிய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விருந்துப சாரத்தின் காரணமாக ஏற்பட்ட களேபரத்தில் மூன்று இளைஞர்கள் தாக்கப்பட்ட நிலையில் ஏறாவூர் பொலீசாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
செங்கலடி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று மாலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் கே.கே.அரஸ் அவர்களினால் நடத்தப்பட்ட இரகசிய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வழங்கப்பட்ட மது விருந்துபசாரம் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் கூட்டத்திற்கு சென்ற மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூட்டம் நடந்த வீட்டில் உள்ள பெண் ஒருவருடன் கூட்டத்திற்கு வந்த குறித்த இளைஞர்கள் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறியே இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சரமாரியாக தாக்கப்பட்ட இளைஞர்களை சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் ஏறாவூர் போலீசார் கைது செய்து மீட்டுச்சென்றுள்ளனர்.