இலங்கையில் 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வில் மற்றும் அம்பு பயன்பாட்டிற்கான பழமையான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது, ஆபிரிக்காவிற்கு வெளியே வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் வில் மற்றும் அம்புகளை பழமையான முறையில் பயன்படுத்தியதற்கான தொழில்நுட்பத்தின் ஆரம்ப சான்றுகளைக் குறிக்கிறது.
பன்றி, மான், விலங்கினங்கள் மற்றும் பிற உயிரினங்களின் எலும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட அம்புகளின் துண்டுகள் குறைந்தது 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு, இலங்கையில் பாஹியன் லென குகையில் காணப்பட்ட குரங்கு மற்றும் அணில் ஆகியவற்றின் எலும்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஆரம்பகால மனிதர்கள் அவற்றை வேட்டையாடினர் என ஆராய்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த குகை தெற்காசியாவில் ஹோமோ சேப்பியன்களின் ஆரம்பகால புதைபடிவ தோற்றத்தின் இடமாகும்.
4,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் மனிதர்கள் இப்பகுதியை ஆக்கிரமித்தனர்.
குகையில் உள்ள சில எலும்புகள் கருவிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே மழைக்காடுகளில் விரைவாக நகரும் இத்தகைய சிறிய விலங்குகளை நம் ஆரம்பகால மூதாதையர்கள் எவ்வாறு வெற்றிகரமாக வேட்டையாட முடிந்தது என்பதைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் அவற்றை பகுப்பாய்வு செய்தனர்.
இதேவேளை குறித்த அம்புகளின் துண்டுகள் ஐரோப்பாவில் காணப்படும் தொழில்நுட்பத்தின் ஆதாரத்தையும் விட பழமையானவை என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழு கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.