Loading...
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20) என்பவரே காயமடைந்துள்ளார்.
Loading...
‘கெற்பேலி மத்திப் பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகாமையில் பாலாவியில் இருந்து வந்த இருவர் கசிப்பு அருந்தியதாகவும் அவ்வழியில் சென்ற இளைஞரை கசிப்பு அருந்துவதற்காக அழைத்த போது அவர் மறுத்ததால் குறித்த இளைஞரை சரமாரியாக தாக்கியதாகவும், அதனால் அவர் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Loading...