கைகளில் முத்தமிட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்தியதாகக் கூறிய அஸ்லாம் பாபா கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர், தன்னை முஸ்லிம்களின் கடவுள் என அழைத்து வந்தார்.
ஜூன் 4 அன்று மத்திய பிரதேசத்தின் நயபுரா மாவட்டத்தில் கோவிட் -19 இல் இறந்தார்.
ஏராளமானோர் அவரிடம் முத்தம் வாங்கிச் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக, யாரோ ஒரு தீவிர பக்தர், பாபாவுக்கு கரோனாவை பரிசளித்துச் சென்றுள்ளார்.
அவர் இறந்த செய்தி பரவியவுடன், ரத்லத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். அஸ்லாமுக்கு சிகிச்சைக்காக வந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடக்கிறது.
பரிசோதனைகளில், அவரிடம் முத்த சிகிச்சைக்கு வந்த 19 பேர், அவருடன் தொடர்பிலிருந்த 5 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியது தெரிய வந்துள்ளது. இப்பொழுது அந்த மாவட்த்தில் 29 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பூரண குணமடைந்த பின்னரே விடுவிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரத்லம் இப்போது ஒரு கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. முத்தத்தின் மூலம் கொரோனாவை அழிக்கலாமென கூறி, இறுதியில் மாவட்டத்தில் அந்த பாபா கொரோனாவை பரப்பியுள்ளார்.
ஜூன் 9, 2020 அன்று ரத்லத்தில் கிடைத்த 24 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், அஸ்லாமுடன் தொடர்பு கொண்டவர்கள். .
இந்த வகையானவர்கள் பெரும்பாலும் தண்ணீரில் ஊதி நோயாளிகளை குடிக்க வைக்கிறார்கள். சிறிய துளிகளில் COVID-19 வைரஸ் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவுவதற்கான ஆபத்து காரணமாக இது பெரும்பாலும் ஏற்படுகிறது.
இந்த பாபா முஸ்லிம் நபர் என ஒரு தரப்பு கூறினாலும், அவர் இந்து என இன்னொரு தரப்பு குறிப்பிட்டு வருகிறது.