பிரான்சில் மீண்டும் பாரிய அளவிலான வைரஸ் பரவல் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் உள்ளிருப்பில் இருந்து வெளியேறி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் சமூக பரவல் ஆரம்பித்துள்ளதாக ஊடகங்களிடையேயும் மக்களிடையேயும் அச்சம் எழுந்துள்ளன .
எனினும் அவற்றில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என பிரான்ஸ் பொது சுகாதார நிறுவனம் (Santé publique France) தெரிவித்துள்ளது.
COVID 19 வைரஸ் தொற்று ஏற்பட்ட வலையங்களின் எண்ணிக்கையும், மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும், தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிகையும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்துள்ளன.
அதேவேளை, மிக முக்கியமான தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். மே 31 ஆம் திகதியில் இருந்து ஜூன் 6 ஆம் திகதி வரை 194,000 பேர் சோதனையிடப்பட்டனர்.
அவர்களில் 2,900 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 1.5% வீதம் எனும் மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.