இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே நியூசிலாந்தில் நடக்கும் சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த தொடரில் ஜெயவர்த்தனே Central Districts அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடந்த Otago அணிக்கு எதிரான போட்டியில் வழக்கமான அதிரடி ஆட்டத்தை காட்டிய ஜெயவர்த்தனே Central Districts அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Central Districts அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் சேர்த்தது.
இதில் ஜெயவர்த்தனே 44 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ஓட்டங்களை குவித்தார். டாம் புரூஸ் 33 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதன் பின்னர் 167 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என களமிறங்கிய Otago அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
Otago அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் நிஸாம் 34 ஓட்டங்களை குவித்தார்.
இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் Central Districts அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.