வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று மாலை குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த இருவர் நிலைய அதிபருடன் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்டதாகவும்,தகராறில் ஈடுபட்டதோடு புகையிரத நிலைய அதிபருக்கு அச்சுறுத்தலும் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர் எனவும் புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக புகையிரத நிலைய தலைமையகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும் வரை புகையிரத சேவைகளை நிறுத்துவோம் எனவும் தெரிவித்தமையால் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் புகையிரத நிலைய உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளனர்.