பலரின் வீட்டில் சாதம் மீந்து போனால், அதை அடுத்த வேளைக்கு பயன்படுத்தாமல் வீணாக எடுத்து கொட்டுவது தான் வழக்கம். ஆனால் இனிமேல் அதை செய்யத் தேவை இல்லை.
வீட்டில் மீதமான சாதத்தை வைத்து இரண்டே நிமிடத்தில் பஞ்சு போல, எப்படி இட்லி மாவு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்..
இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
சாதம் ஒரு- 1 கப்
ரவை-1/4 கப்
தயிர்-1/4 கப்
உப்பு-தேவையான அளவு
இவை அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாக போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது. கெட்டியான இட்லி மாவு பதத்தில் அரைத்து கொள்ளுங்கள்.
அரைத்த அந்த மாவை பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு, அதன் பின்பு எப்பவும் போல், இட்லி சட்டியில், இட்லி ஊற்றி விடலாம். மாவு அரைத்து செய்த இட்லியை விட, இந்த இட்லி மிகவும் சுவையானதாக இருக்கும்.