ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி மேம்பாலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சோதனைச்சாவடி அருகே ஆவி நடமாட்டம் இருப்பதாக வெளியான வீடியோ பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், அப்பகுதியின் அருகே சுடுகாடும், மின் மயானமும் இருப்பது இந்த வீடியோ குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
4 மணி நேரமும் வாகனங்கள் வந்து சென்று கொண்டு இருக்கும் இப்பகுதியில் ஆவி நடமாட்டம் இருப்பதாக கூறுவதை நம்ப முடியவில்லை.
ஆனால், சோதனைச்சாவடியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவில் வெள்ளை நிறத்தில் உருவம் ஒன்று மேம்பாலம் நோக்கி சிறிதுநேரம் சென்று மறைவதை போல பதிவாகி இருந்தது.
இதைப்பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், போலீசாரும் பீதி அடைந்தனர். இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.