வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு, தோலை விசிறி எறிவோம். ஆனால் அந்த தோலினால் பற்பல பயன்கள் உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
முள்ளை எடுக்க..
கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் வேண்டாம்.
முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.
சோரியாஸிஸ் தொல்லை நீங்க..
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்கள் ஏற்பட்டால் சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி பாளம் பாளமாக வெடித்திருக்கும். பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.
மருக்கள் நீங்க..
வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். ஒரே வாரத்தில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.
சரும பிரச்சினை தீர..
ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஏற்படும். வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
வெண்மையான பற்கள் பெற..
தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு பற்களை தேயுங்கள். நாளடைவில் பற்கள் மின்னும்.
கண் கருவளையம் நீங்க..
தினமும் வாழைப்பழத்தோலை கண் கருவளையத்தில் வைத்து மெல்ல தேய்த்து வந்தால் நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்