சுவிஸில் விளையாட்டு பணத்தாளை வணிக வளாகம் ஒன்றில் பயன்படுத்த முயன்ற வழக்கில் விசாரணையை எதிர்கொண்ட 8 வயது சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தாரிடம் பாஸல் மண்டல பாதுகாப்பு இயக்குனர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
சிறுவன் தொடர்பான அந்த வழக்கு விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருந்தது.
பொலிசாரின் எதிர்கால அடையாள நோக்கங்களுக்காக குறித்த 8 வயது சிறுவன் ஒரு குற்றவாளியைப் போல புகைப்படம் எடுக்கப்பட்டான்.
கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த காட்சியுடன் அந்த புகைப்படங்கள் பொலிஸ் அதிகாரிகளால் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் ஆவணங்களில் 2032 ஆம் ஆண்டு வரை சிறுவன் தொடர்பான தகவல்கள் பதிவாகியிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் சிறுவனின் பெற்றோரை மனதளவில் கடுமையாக பாதித்தது. மட்டுமின்றி பிரித்தானியா மற்றும் ஜேர்மானிய பத்திரிகைகள் சிறுவன் தொடர்பான வழக்கு விவகாரத்தை வெளியிட்டது.
ஆனால் இந்த விவகாரம் கைவிட்டுப் போனதாக கருதிய அந்த புகார் அளித்த அங்காடி சிறுவனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
மட்டுமின்றி, பாஸல் மண்டல நீதித்துறை தற்போது சிறுவன் விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது.
காவல்துறையினர் தங்கள் புலனாய்வு வைராக்கியத்தில் வெளிப்படையாக உரிய இலக்கை மீறி இருப்பதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை, நீதித்துறை இயக்குநர் கேத்ரின் ஷ்வீசர் (எஸ்.பி.) சிறுவனின் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் மன்னிப்பு கேட்டதாக பாதுகாப்பு இயக்குநரகம் அறிவித்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் குடும்பத்திற்கு மனிப்பு கடிதமும் தபால் மூலம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் தொடர்பான வழக்கில் பொலிசார் மேற்கொண்ட பல தவறுகளுக்கு ஷ்வீசர் உடனடியாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
எனவே சிறுவன் தொடர்பில் சேகரிக்கப்பட்ட தரவுகள் இனி சேமிப்பகத்துடன் ஒருபோதும் வெளியிடப்படாது.