கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் அனைத்து வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் என ஜனாதிபதி மக்ரோன் பிரகடனம் செய்துள்ளார்.
ஞாயிறன்று இரவு செய்தி ஊடக நேரலையில் தோன்றிய மக்ரோன், பார்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இந்த வாரத்தின் தொடக்கத்தில் முடிவுக்கு வரும் என்றார்.
மேலும், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாடசாலைகள், கல்லூரிகள், சிறார் பாடசாலைகள் என அனைத்தும் கட்டாயமாக செயற்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரையான நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 243 என குறைந்து, முந்தைய வாரம் இந்த எண்ணிக்கயானது 353 என இருந்தது.
திங்கட்கிழமை முதல் ஒரு புதிய அத்தியாத்தை துவங்க உள்ளதாக குறிப்பிட்ட மக்ரோன்,
பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் பயன்படுத்துவதும் ஊக்குவிக்கப்படும் என்றார்.
மேலும், திங்கட்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பயணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1 ஆம் திகதி முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளுக்கும் பயணப்பட முடியும் என்றார் மக்ரோன்.