ஐபிஎல் 2020 சீசனை இலங்கையில் நடத்தலாம் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் குறைந்தது அக்டோபர் வரை போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இங்கிலாந்து- மேற்கிந்திய தீவுகளுக்கான தொடரை வைத்து மதிப்பிடலாம்.
இதேபோன்று மைதானத்திற்குள் குறைந்தளவு ரசிகர்களை அனுமதிக்கலாம் என அவுஸ்திரேலிய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் அங்கே 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடர் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது, இப்போட்டித் தொடர் திட்டமிட்டபடி நடந்தால் ஐபிஎல் தொடரை நடத்துவது கடினமாகிவிடும்.
இந்தியாவிலும் நடத்த முடியாது என்பதால் செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே இலங்கையில் நடத்தலாம்.
இதற்கு ஏற்றவாறு போட்டி அட்டவணையையும் மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.