Loading...
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்று நாளைய தினம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின் ஆணைக்குழு முதல் முறையாக நாளை கூடுகிறது.
Loading...
இச்சந்திப்பில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகையின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை தபால் மூல வாக்களிப்பு தொடர்பாகவும் சில தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...