நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்யவில்லை, அவரை யாரோ கொன்றுவிட்டார்கள் என்று அவரின் சொந்த தாய்மாமா தெரிவித்து இருக்கிறார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரணம் இந்தியாவை உலுக்கி உள்ளது. தோனியின் வாழ்க்கை வரலாறு படம் தொடங்கி பல படங்களில் நடித்து இவர் இந்தியா முழுக்க பிரபலம் ஆனார். இந்த நிலையில் வெறும் 35 வயதில் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.
அவரின் தற்கொலை சினிமா உலகை புரட்டி போட்டுள்ளது. பிரதமர் மோடி, சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் சுஷாந்த்சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சுஷாந்த்சிங் தற்கொலைக்கு இதுவரை முழுமையான காரணம் என்ன என்று தெரியவில்லை. சுஷாந்த்சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். சுஷாந்த்சிங் சிகிச்சை பெற்று வந்த மன நல மருத்துவரிடம் இது தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
மன அழுத்தம் தவிர சுஷாந்த்சிங்கிற்கு பிரச்சனை எதுவும் இல்லை. அவரின் படங்கள் சில வெளியாக காத்து இருக்கிறது. இன்னும் சில படங்களுக்கு கூட அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவருக்கு பொருளாதார ரீதியாகவும் பெரிய அளவில் பிரச்சனை இல்லை. ஆனாலும் கூட இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் இவரின் தற்கொலை பெரிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இந்த நிலையில் சுஷாந்த்சிங்கின் தாய்மாமா தற்போது இது தொடர்பாக புதிய சந்தேகம் எழுப்பி உள்ளார். சுஷாந்த்சிங் தாய்மாமா என்ஏஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சுஷாந்த்சிங் தற்கொலை செய்து இருக்க வாய்ப்பு இல்லை. அவர் அப்படிப்பட்ட நபர் இல்லை. இதை உடனே விசாரிக்க வேண்டும். அவரின் மரணத்திற்கு பின் பெரிய மர்மம் இருக்கிறது.
அவரை யாரோ கொலை செய்து விட்டார்கள். இதை பொலிஸ் கண்டுபிடிக்க வேண்டும். விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்று சுஷாந்த்சிங் தாய்மாமா கூறியுள்ளார். அதேபோல் அவரின் ரசிகர்கள் மற்றும் ஜன அதிகார் என்று கட்சியை சேர்ந்த நபர்கள் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதற்கு பின் வேறு சில விஷயங்கள் நடந்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
சுஷாந்த்சிங் தற்கொலை செய்த இடத்தில் சந்தேகத்திற்கு உரிய விஷயம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் தற்கொலை கடிதம் எழுதவில்லை. அதே சமயம் அவரை பலவந்தப்படுத்திய அடையாளம் எதுவும் இல்லை என்று பொலிசார் கூறியுள்ளனர். இதனால் சுஷாந்த்சிங் மரணம் குறித்த சர்ச்சைகளும், சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது.
We don’t think he committed suicide, police must investigate the matter. There seems to be a conspiracy behind his death. He has been murdered: Maternal uncle of #SushantSinghRajput, outside Sushant's residence in Patna, Bihar. (14.06.2020) pic.twitter.com/aUO80KNZdf
— ANI (@ANI) June 15, 2020
மேலும் சுஷாந்த்சிங் இறுதியாக இரண்டு நபர்களுக்கு போன் செய்து வெகுநேரம் பேசியுள்ளார். முதலில் அவரது சகோதரிக்கு போன் செய்து 20 நிமிடத்திற்கு மேல் பேசியுள்ளார். பின்பு அவரது நண்பரான பாலிவுட் நடிகர் மகேஷ் ஷெட்டியுடன் பேசியுள்ளார்.
சுஷாந்த்சிங் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணம் இந்த நடிகர் தான் என்றும், இவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் பொலிசார் நடிகர் மகேஷிடம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் நேற்று காலை 10 மணிக்கு பின்பே இந்த போன் கால் பேசப்பட்டுள்ளது என்பதால், அவரது தற்கொலை காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று பொலிசார் கூறுகின்றனர்.