நடிகர் சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று தனது மும்பை இல்லத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்ட நிலையில் அவர் மரணத்தில் சதி இருப்பதாக தாய் மாமா குற்றஞ்சாட்டினார்.
மேலும் சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள Dr RN Cooper Municipal General மருத்துவமனையில் தான் பிரேத பரிசோதனை நடந்தது.
மூன்று மருத்துவர்கள் இதை மேற்கொண்டனர். அதில், சுஷாந்தின் மரணம் தற்கொலையே என கூறப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கியதால் ஏற்பட்ட முச்சுத்திணறல் காரணமாக சுஷாந்த் மரணம் நிகழ்ந்துள்ளது என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து இன்று மும்பையில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது, ஏற்கனவே சுஷாந்தின் குடும்பத்தார் நேற்று இரவு பீகாரில் இருந்து மும்பைக்கு வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.