அபிவிருத்தி திட்டங்களை மஹிந்த உருவாக்கினார், மைத்திரி திறந்து வைத்தார், ரணில் விற்பனை செய்கிறார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு இன்று ஆபத்தான நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை வளைக்கும் பொலிஸ்மா அதிபர் பாதுகாக்கப்படுகின்றார்.
ஊடகவியலாளரைத் தாக்கும் கடற்படைத் தளபதிக்கு நன்றி தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து கொண்டு இதைத் தான் அரசாங்கம் செய்கின்றது. ஆனால், கிராமங்களில் நடப்பவை அதற்குத் தெரியவில்லை.
எனவே, இந்த அரசு இழைக்கும் குற்றங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என விமலவீர திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.