பிரித்தானியால் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படுமென அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில் கருப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்ட் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கருப்பினத்தவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அங்குள்ள வீதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்த அடிமைகளை விற்பனை செய்த வர்த்தகரின் சிலையை உடைத்து ஆற்றில் வீசி எறிந்தனர்.
தினமும் நடைபெறும் தொடர் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு காவல்துறையினர் திணறி வரும் நிலையில்,
பிரித்தானியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.