நியூயார்க் நகரில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட பேசிய ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:-
தேர்தலில் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் தான்.
புதினுக்கு என்னுடன் இருக்கும் தனிப்பட்ட பகை காரணமாகவே அவர் அதிபர் தேர்தலில் தலையிட்டு தனக்கு எதிராக செயல்பட்டு உள்ளார்.
என்னுடன் இருக்கும் பகைமை காரணமாக அவர் நாம் நாட்டின் தேர்தல் முறைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக செயல்பட்டுள்ளார்.என கூறினார்.
கடந்த 2011ம் ரஷ்யாவில் நடந்த பாராளுமன்றத் தேர்தல் ஒரு மோசடி என ஹிலாரி கிளிண்டன் குறற்ம்சாட்டினார்.
இதனையடுத்து, ரஷ்யாவில் ஹிலாரிக்கு எதிராக தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது நினைவுக்கூரத்தக்கது.
இதற்கு ஜனாதிபதி புதினும் கடும் கண்டனங்களை தெரிவித்தார். இச்சம்பவத்தை அடுத்தே இருவருக்கும் இடையில் பகைகை நிலவி வருகிறது என கூறப்படுகிறது.