தமிழகத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இடையன் வயலை 19 வயதான சாவித்திரி, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
தோப்புக் கொல்லையை சேர்ந்த பெயிண்டராக பணிபுரியும் விவேக் என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் சாவித்ரி. வாகன சோதனையின் போது , பொலிசார் விவேக்கிடம் விசாரணை செய்த போது, அவருக்கு 21 பூர்த்தியாகாதது தெரியவந்தது.
பொலிசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து அவர்களை அனுப்பி வைத்த நிலையில், சாவித்திரிக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சாவித்திரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவோடு, இரவாக சாவித்திரியின் உடலை எரித்துள்ளனர்.
சாவித்திரியை அவர் குடும்பத்தாரே கெளரவ கொலை செய்திருக்கலாம் என காதலன் புகார் கொடுத்தது பெரிய அதிர்வலையை கிளப்பியது.
இந்த நிலையில் சாவித்திரி வழக்கை தற்கொலையாக பதிவு செய்த பொலிசார் அவரின் தாய் சாந்தி உட்பட 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.