ஊரங்கு காலக்கட்டத்தில் சீன ராணுவம் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்காக பல விளையாட்டு வீரர்கள் டுவிட்டர் மூலம் தங்களது அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவரிசையில் ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்றவரான இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாரும் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் “ கொரோனாவுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் இணைந்து போராடும் வேளையில் சீனா இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது.
சீனாவுக்கு எதிரான மோதலில் நமது ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
சீனாவுடன் நாம் நல்ல உறவை வைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சீனாவின் பொருட்களை வாங்காமல் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
சீன பொருட்கள் நமது நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க அரசு கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும்.
மேலும் நாட்டுக்கான சேவையில் உயிர்நீத்த வீரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தலைவணங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.