இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள்.
அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அன்பார்ந்த யாழ் மக்களே!
இம்முறை நாடாளுமன்ற தேர்தல் என்பது வழமைபோன்ற ஒரு தேர்தல் அல்ல. தமிழர்களாகிய நாங்கள் மிக மிக அவதானமாகச் செயற்பட்டேயாக வேண்டிய ஒரு தேர்தல்.
சீனாவின் பக்கம் முழுவதுமாகவே சென்றுவிட்டுள்ள ஸ்ரீலங்காவை வழிக்கொண்டு வருவதற்கு தமிழ் மக்களின் ஆதரவை சர்வதேச சமூகம் வேண்டி நிற்கும் தருணத்தில் நடைபெறுகின்ற முக்கியமான ஒரு தேர்தல்.
தமிழ் மக்கள் மிகவும் சிந்தித்து தமது தலைமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு காலம் இது.
யார் தமிழ் மக்களின் தலைவராக வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்க, யார் யாரெல்லாம் தமிழ் மக்களின் தலைவராக வரக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டிய சந்தர்ப்பம் இது.
அந்தவகையில் சுமந்திரன் என்ற நபர் விடயத்தில் யாழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என்று இந்தப் பிரசுரத்தின் ஊடாக எச்சரிக்கை விடுக்கின்றோம் என்று அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
யாழ் மக்கள் எதற்காக சுமந்திரனுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் பல விடயங்கள் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.