கொரோனா தொற்று ஏற்பட்ட சிலருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமைக்கு அவர்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஆய்வினை மேற்கொண்ட சோங்கிங் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட ஏராளமானவா்களுக்கு எந்த அறிகுறிகளும் வெளிப்படாமல் உள்ளது.
குறிப்பாக தொற்று ஏற்பட்டவா்களுக்கு சுவாசப் பிரச்னைகள், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் 02 முதல் 14 நாட்களுக்குள் தென்படும்.
கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன் வான்ஷூ மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும், அதன் அறிகுறிகள் வெளிப்படாத 37 ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்திய பிற நோயாளிகளுக்கு இடையிலான நோய் எதிா்ப்பு சக்தி ஒப்பிட்டுப் பாா்க்கப்பட்டது.
அதில், அறிகுறிகளை வெளிப்படுத்தியவா்களை காட்டிலும் அறிகுறிகள் வெளிப்படாதவா்கள் உடலில் நோய் எதிா்ப்பு உயிரணுக்கள் குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. அவா்களுக்கு எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனினும், இதுதொடா்பாக கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.