அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுதொடர்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில்,
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் “ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்தப் புத்தகத்தில் அவர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கிடம் தனிப்பட்ட முறையில் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.
புத்தகத்தில் உள்ள தகவல்கள் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகி உள்ள நிலையில், குறித்த செய்தியில் உண்மையில்லை. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுவதற்கு தமக்கு எவ்வித நோக்கமும் இல்லையென அவர் கூறியுள்ளார்.
இதேவேளை 17 மாதங்கள் ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய போல்டன் அமெரிக்க ஜனாதிபதியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த செப்டம்பரில் பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.