முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயற்பாடுகள் காரணமாக அளுத்கமை தர்கா நகரில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் முஸ்லிம் அமைச்சர்களான எம்.எச்.எம்.ஹலீம், ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன் ஆகியோர் சில பௌத்த பிக்குகளுக்கு பணத்தை கொடுத்து அவர்களை அரசியல் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று ஞானசார தேரர் சில பிரதேசங்களில் வெளியிட்ட சில கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்தியிருந்தது.