அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், தமது வாக்களர்களுக்கு நன்றி தெரிப்பதற்காக மேற்கொண்ட பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் திரு டிரம்ப்பின் தோல்வி முன்னுரைப்புகள் குறித்து அந்நேரத்தில் வருத்தமடையவில்லை என்று அவர், அலபாமா மாநிலத்தில் தமது வாக்காளர்களிடம் தெரிவித்தார். தாம் அயராது உழைத்ததால் பிரசாரம் குறித்து நிம்மதியாக இருந்ததாய்த் தமது மனைவியிடம் தெரிவித்ததாகத் டிரம்ப் கூறினார்.
அத்துடன், டிரம்ப், தமது தோல்வியை முன்னுரைத்த செய்தியாளர்களைக் குறைகூறினார்.
தமது வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருந்தபோது, செய்தி வாசிப்பாளர்கள் பலரின் முகத்தில் வாட்டம் தென்பட்டதாக அவர் சுட்டினார். அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டாலும் தாங்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று டிரம்ப் கண்டித்தார்.