வேற்றினத்தவர்களையும் விட தெற்காசிய மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு புதிய அறிக்கைசுட்டிக்காட்டுகின்றது.
வெள்ளை இனத்தவர்களைவிட தெற்காசிய மக்கள் கோவிட் -19 ல் இருந்து மருத்துவமனையில் இறப்பதற்கு 20 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது, மற்ற இனத்தவர்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை.
இது பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர், அதே நேரத்தில் மரபணு வேறுபாடுகள் சிலருக்கு வைரஸால் பாதிக்கப்படக் கூடியவையாகவும் இருக்கலாம்.
எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான இந்த ஆய்வில், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகள் மற்றும் 260 மருத்துவமனைகள் உட்பட இங்கிலாந்து முழுவதும் இருபத்தேழு நிறுவனங்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டன.
கோவிட் -19 க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு 1,000 வெள்ளை மக்களில் 290 பேர் இறக்கின்றனர்.
அதே சமயம் ஒவ்வொரு 1,000 தெற்காசிய மக்களில் 350 பேர் இறக்கின்றனர்.
“வெள்ளை இனத்தவரோடு ஒப்பிடும்போது, மருத்துவமனையில் உள்ள தெற்காசிய இனத்தவரின் மரண வீதமும் தொற்று விகிதமும் சற்று அதிகமாகவே இருக்கிறது” என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈவன் ஹாரிசன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
தெற்காசிய இனத்தவர்களில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றது. இதனாலேயே ஆசிய இனத்தவர்களின் கொரோனா தொற்றும், இறப்பு வீதமும் அதிகரிக்கின்றது.
தெற்காசியாவைச் சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் நோயாளிகளில் சுமார் 40% பேர் டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோயைக் கொண்டிருந்தனர்.
தடுப்பூசி யார் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீர்மானிக்கும் போது இனத்தையும் இப்போது வயதையும் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
எனவே தெற்காசிய மக்கள் அதாவது சிறுபான்மையின மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் கொரோனா வைரஸ் இலிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக முகக்கவசம் அணிதல் மிகமிக அவசியம் என அவர் தெரிவித்தார்.