தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சினேகா என்ற 18 வயதில் மகள் இருந்தார்.
சினேகா, மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
வரும் வியாழக்கிழமைதான் திருமண தேதி குறித்திருந்தனர்.
இந்நிலையில் சினேகா தனது தோட்டத்தில் இருக்கும், மரத்தில் துப்பட்டாவில் பிணமாக தொங்கியபடி கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருமண திகதி குறித்த நிலையில் சினேகாவின் மரணம் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இவர் உண்மையிலேயே தூக்கு போட்டுதான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.