இந்நிலையில், ஹீரோவாக புது அவதாரம் எடுத்திருக்கும் சந்தானம், தற்போது நெருங்கிய நண்பர்களின் படங்களில் மட்டுமே காமெடியனாக நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில், தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய சிம்புவை தன்னுடைய படத்தில் புது அவதாரம் எடுக்க வைத்துள்ளார் சந்தானம்.
சந்தானம் தற்போது ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சிம்பு, இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்பு ஏற்கெனவே, நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுப்பது இதுவே முதல் முறை.
‘சக்கை போடு போடு ராஜா’ படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தில் சந்தானத்துடன் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள வைபவி சாந்தலியா நடிக்கிறார். விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.