Loading...
தனது ஆதரவும் வழிகாட்டுதல்களும் தொடர்ந்தும் கிடைக்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் பிறந்தினமான இன்று அவர் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
Loading...
உங்கள் வாழ்க்கையின் இன்னொரு வருடத்தினை நீங்கள் கொண்டாடும் இந்த தருணத்தில் இலங்கை குறித்து எமக்குள்ள கூட்டுநோக்கத்தினை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை நீங்கள் வழங்குவதற்கான ஞானம் வலிமை மற்றும் பொறுமை உங்களிற்கு கிடைக்கவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
இந்த பாதையில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எனது ஆதரவும் வழிகாட்டுதல்களும் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தினை வழங்குகின்றேன் என தெரிவித்துள்ளார்.
Loading...