ஒருவருக்கு உறக்கம் என்பது 8 மணி நேரம் வரை போதிய அளவு என்று கூறுவார்கள்.
ஆனால் அதை விட எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு அதை பின்பற்றி வந்தால், அவர்களின் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
0-3 மாதம்
பிறந்த குழந்தை 3 முதல் மூன்று மாதம் வரைக்கும் ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவது மிகவும் அவசியமாகும்.
4-11 மாதம்
4 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
1-5 வயது
1 முதல் 5 வயதை அடைந்த குழந்தைகள், ஒரு நாளைக்கு 11-14 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகும். ஏனெனில் தூக்கம் என்பது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும்.
பள்ளி செல்லும் குழந்தைகள்
குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரமிக்கும் போது, அவர்களுக்கு குறைந்தது 6-13 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
14-17 வயது
14 வயதுக்கும் மேல் ஆகி விட்டால், அவர்கள் 8-10 மணி நேரம் வரை அவசியம் தூங்க வேண்டும்.
18-64 வயது
18 வயதுக்கு மேல் ஆனவர்கள், ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள்
65 வயதிற்கு மேல் ஆனவர்கள் ஒரு நாளைக்கும் 7-8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும். இதனால் அவர்களின் உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
குறிப்பு
சிறிய வயதில் இருந்து மேல் குறிப்பிட்டுள்ள வயதினற்கேற்ற தூக்கத்தை பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையாகவும் இருக்கும்.