பிரித்தானியாவில் கருப்பின ஆதரவு ஆர்ப்பாட்டம் நடந்த பூங்காவில் வன்முறை வெடித்த நிலையில் மூவர் கொல்லப்பட்டதாகவும் 9 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெர்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள Forbury Gardens பகுதியிலேயே குறித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது பயங்கரவாத தாக்குதல் என்றே பொலிஸ் தரப்பு தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர். மட்டுமின்றி சம்பவயிடத்தில் இருந்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதாகவும் 9 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைதான நபர் லிபியா நாட்டவர் என கூறப்படுகிறது.
இதனிடையே கருப்பின ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கும் இந்த கத்திக்குத்து சம்பவத்திற்கும் தொடர்பு ஏதும் இல்லை எனவும், ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்து இரண்டு மணி நேரத்திற்கு பின்னரே Forbury Gardens பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கொடூர தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயல் பெர்க்ஷயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொலிசார் தரப்பில் இந்த சம்பவத்தை குறிப்பான நோக்கம் ஏதுமின்றி முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று கருதுவதாகவும், யார் பொறுப்பு என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது இது பயங்கரவாத தாக்குதலுக்கு ஒப்பானது என தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி ட்விட்டரில் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே உள்துறை செயலாளர் பிரிதி படேல், வெளியான தகவல்களைத் தொடர்ந்து மிகுந்த அக்கறையுடன் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சனும் இது அச்சுறுத்த வைக்கும் தாக்குதல் என குறிப்பிட்டு, அவசரகால சேவைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.