Loading...
தனுஷ் தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘விஐபி 2’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்திற்கான பூஜையும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்படத்தின் இயக்குனரான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து மேலும் தனுஷ் தன்னுடைய நடிப்பில் உருவாகி வெளிவந்த மற்றொரு படமான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே, ‘மாரி’ 2-ம் பாகம் உருவாகப்போவதாக செய்திகள் வெளிவந்தாலும், அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
Loading...
இந்நிலையில், இன்று ‘மாரி’ இரண்டாம் பாகத்தில் முழுக்கதையையும் இயக்குனர் பாலாஜி மோகன் தன்னிடம் ஒப்படைத்துவிட்டதாக தனுஷ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் கதை முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், இப்படத்தின் வேலைகள் கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...