உலகின் பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் தென்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவில் நாம் இதை பார்க்க முடியுமா என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போதோ அல்லது நேர் உள்ளமைப்பில் வரும் போதும், சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சந்திரன் வரும்போதும், சூரியனின் கதிர்கள் பூமியை மறைக்கும் நிகழ்வே, சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் நிகழும். இவை மிகவும் அரிதானவை என்று கூறப்படுகிறது.
தற்போது(இன்று) நிகழும் சூரிய கிரகணம் மத்திய ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு வழியாக சென்று தென்கிழக்கு ஆசியாவில் முடிவடையும்.
இருப்பினும், கிரகண பாதைக்கு வெளியே உள்ள சில நாடுகள் கிரகணத்தைப் பார்க்கலாம்.
ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகள் சூரிய கிரகணத்தை காண முடியும். இது (பிரித்தானியா நேரம்) காலை 7:40 மணி முதல் 9:32 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிகழ்ந்து வரும் சூரிய கிரகணம் பிரித்தானியாவில் பார்க்க முடியாது. அதுவே, கிழக்கு ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியாவின் வடக்கு, ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் தென்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நிகழும் கிரகணம் குறித்து நாசா தெரிவிக்கையில், கிரகணத்தின் சிறந்த காட்சியை மத்திய ஆபிரிக்கா, அரேபியாவின் பென்னின்சுலா மற்றும் ஆசியாவில் இருக்கும் நாடுகள் ஒவ்வொன்றிலும் காணலாம்.
ஆனால், நேரம் ஒவ்வொரு நாடுகளுக்கும் மாறுபடும் என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.