Loading...
தேன் என்பது மிகவும் அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும். இந்த தேன் நமது உடம்பில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உள்ளது.
Loading...
தேனைப் போலவே எள்ளும் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் ஆகும். எனவே ஆரோக்கியம் நிறைந்தை இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
தேனில் எள் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கிறது.
- எள்ளுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதால், மற்ற இனிப்பு வகை உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைத்து, உடல் எடையைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, வாயின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
- பெண்கள் தேன் மற்றும் எள்ளை கலந்து தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஏனெனில் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வயிற்று வலியைத் தடுக்கிறது. மேலும் எள்ளில் இருக்கும் இரும்புச்சத்துக்கள் நமது உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது.
- வயிற்றில் புண் இருப்பவர்கள், தினமும் எள்ளையும் தேனையும் ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால், தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் வயிற்றுச் சுவரைப் பாதுகாத்து, வயிற்று புண்களைக் குணப்படுத்துகிறது.
- எள் மற்றும் தேனில் கால்சியம் அதிகம் உள்ளதால், இதை சேர்த்து தினமும் சப்பிட்டு வர, நமது எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரித்து, வயதான காலத்தில் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.
- தேன் மற்றும் எள் சேர்ந்த கலவையானது, நமது மூளைக்கு மிகுந்த ஆற்றலை வழங்கி, சிறப்பான முறையில் செயல்பட உதவுகிறது. மேலும் இதை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.
- கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், எள் மற்றும் தேனை ஒன்றாக கலந்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், நமது உடம்பில் உள்ள அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்றாடம் உணவில் எள்ளை உட்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் எள்ளை தேனுடன் கலந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- தேன் மற்றும் எள் கலவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், இதை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு, சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுகிறது.
Loading...