படகில் பயணித்த உறவினர்களிடம் காசு பெற்றுக்கொண்டது தனக்கு அவமானம் எனக்கூறி நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 6 பொலிஸாரை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திடீரென இன்று(18) இடமாற்றம் செய்துள்ளார்.
குறித்த உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் உறவினர்கள் யாழிற்கு சுற்றுலா நிமித்தம் சென்றுள்ளனர்.
இதேவேளை அங்கு சென்றவர்களை குறிகட்டுவானில் இருந்து நாகதீபத்திற்கு அழைத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
இந்த நபர்களை படகில் பொலிஸார் அழைத்துச்சென்ற போது, படகு ஓட்டுனர் இவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு பணம் பெற்றுக்கொண்டமை தனக்கு அவமானம் எனக் கூறி ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த 6 பேரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 6 பேரை நயினாத்தீவு பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தான் விரும்பிய 6 பொலிஸாரை நயினாத்தீவு பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.