தமிழக அரசியலில் புரட்சி தலைவர் என்றால் எம்ஜிஆர் மற்றும் அம்மா என்றால் ஜெயலலிதா மட்டும் தான். இது அனைவருக்கு தெரிந்த சங்கதி!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி அவர் வகித்து வந்த அதிமுக பொது செயலர் பதிவியை சின்னம்மா என அதிமுக நிர்வாகிகளால் ‘திடீரென’ பரவலாக அழைக்கப்படும் சசிகலா ஏற்க வேண்டும் என பலர் அவரை நேரில் சந்தித்தும் போஸ்டர்கள் வாயிலாகவும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதற்கு ஒரு படி மேலே போய் தமிழக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சசிகலா தமிழக முதல்வராக பதிவியேற்க வேண்டும் என பேட்டியளித்தார்.
சும்மா இருப்பார்களா முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்! அவருக்கு ஆதரவாக மாண்புமிகு சின்ன புரட்சி தலைவர் அவர்களே என பட்டம் சூட்டப்பட்ட போஸ்டர்களை சுவரொட்டிகளில் ஒட்டி வருவதும், சமூகவலைதளங்களில் பரப்பி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.