Loading...
நடிகை ஸ்ருதி ராஜ் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.
இவர் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தில் அறிமுகமானவர்.
அதற்கு பின்னர் இனி எல்லாம் சுகமே, kadal.com, ஜெரி, இயக்கம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
சினிமா அவருக்கு கைகொடுப்பது போல தெரியவில்லை அதனால் சீரியலில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அழகு சீரியல் மூலம் பிரபலமானவர், விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் மற்றும் சன் டிவியின் தென்றல் சீரியலில் நடித்தவர். 40வயதை கடந்தும் இன்றும் திருமணம் செய்ய வில்லை. இது ரசிகர்களுக்கு சற்று சோகமான விடயமாகவே உள்ளது.
Loading...